மழை விழும் இலைகளில்
நெளியும் பச்சை இருட்டில்..
பூ விழும் காம்புகளில்
தெரியும் தழும்பில்..
மனம் செல்லும் பாதை
தேடும் எண்ணங்களில்...
உயிர் சுடும் நினைவுகளின்
ரீங்கார புன்னகையில்..
வண்ணத்து பூச்சிகள்
வசிக்கும் மலர்களில்...
தெரியும் எல்லை இல்லா புன்னகையில்...
நான் தேடுவதெல்லாம் ஒரு சிறு துளி கவிதை..
அதில் நனைவதெல்லம் என் மன பறவை...!!!
சிறு துளியில் முகம் துடைக்கும் மே லீலி
மலர் போலே அவள் முகம் தேடி சிலிர்க்கும்..
என் நினைவுகளின் கவிதை...!!
என் மிருதுளா.....!!!!!
No comments:
Post a Comment