வாழ்க்கை என்ற மூங்கில் வீட்டில்
மழை பிறப்பிக்கும் சில நேர சப்தங்கள்
பசும்காட்டின் வண்டு முரல்வது போல
பழைய தருணங்கள் சிலவற்றை புதுப்பிக்கும்..!
கடற்காய்கள் ஒட்டிபிடித்த கடலோர பாசிபாறை
சில கடலலைகளுடன் தழுவுவது போல..
வானம் இருண்ட நீலத்தில் கண் உதிர்ப்பது தெரியாதிருக்கும்
சில காடுமூங்கில்கள் போல..
என் மனம் இயற்கையின் இன்பங்கள் சிலவற்றில்
மூழ்கும்போது பிறக்கிறது இசை..
துன்பங்கள் சிலவற்றில் முளைக்கும்போது
ஒளிசேற்கை செய்கிறது இசை..!